மாஸ் லுக்கில் அரவிந்த் சாமி... வைரலாகும் போஸ்டர்


மாஸ் லுக்கில் அரவிந்த் சாமி... வைரலாகும் போஸ்டர்
x
தினத்தந்தி 19 Sep 2021 4:59 PM GMT (Updated: 19 Sep 2021 4:59 PM GMT)

தலைவி படத்தை தொடர்ந்து அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்'. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாகவும், ரெஜினா நாயகியாகவும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார்.

என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வாயில் சிகரெட்டுடன், கையில் பேண்ட் கட்டும் அரவிந்த்சாமியின் லுக் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story