சினிமா துளிகள்

நயன்தாரா படத்தில் கவின்? + "||" + Gavin in Nayanthara movie?

நயன்தாரா படத்தில் கவின்?

நயன்தாரா படத்தில் கவின்?
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான கவின், அடுத்ததாக நடிகை நயன்தாரா உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘கூழாங்கல்’,  ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் கூழாங்கல் திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.


இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் நடிப்பில் அண்மையில் ஓடிடி-யில் வெளியான ‘லிப்ட்’ திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருவதால், அவர் நடிக்க உள்ள அடுத்த படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்
நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவருடைய புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
2. பிறந்தநாளையொட்டி நயன்தாராவின் அடுத்த பேய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
3. நயன்தாரா படத்தில் ‘லிப்ட்’ பட நாயகன்
நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற சொந்த பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனம் படங்களை தயாரிப்பதுடன், வாங்கி திரையிட்டும் வருகிறார்கள்.
4. செல்வராகவன் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்து இருக்கிறார்.
5. நயன்தாரா திருமண தேதி முடிவானது?
தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டு இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலிக்கிறார்கள்.