டோலிவுட் என்ட்ரியை உறுதி செய்த சிவகார்த்திகேயன்


டோலிவுட் என்ட்ரியை உறுதி செய்த சிவகார்த்திகேயன்
x
தினத்தந்தி 8 Oct 2021 6:15 PM GMT (Updated: 2021-10-08T23:45:27+05:30)

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் டாக்டர் படம், தெலுங்கில் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் கைவசம் டாக்டர், அயலான், டான் போன்ற படங்கள் உள்ளன. இதில், டாக்டர் படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற அக்டோபர் 9-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அன்றைய தினமே தெலுங்கிலும் இப்படம் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் ரிலீசாகிறது.

இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில் பேசிய சிவகார்த்திகேயன், விரைவில் தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இதற்காக தெலுங்கு கற்று வருவதாக தெரிவித்துள்ளார். அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story