பட அதிபர் வெளியிட்ட பரபரப்பான தகவல்கள்


பட அதிபர் வெளியிட்ட பரபரப்பான தகவல்கள்
x
தினத்தந்தி 29 Oct 2021 3:20 AM GMT (Updated: 2021-10-29T08:50:50+05:30)

ராஜராஜதுரை இயக்கி, உசேன் தயாரித்துள்ள ‘முதல் மனிதன்’ படத்துக்கு தாஜ்நூர் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பட அதிபர் கே.ராஜன் கலந்துகொண்டு பேசும்போது, சில பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.

அவர் பேசியதாவது:-

‘‘இப்போது படம் எடுத்தால் 12 கேரவன் தேவைப்படுகிறது. நயன்தாரா படப்பிடிப்புக்கு வந்தால், 7 உதவியாளர்கள் அவருடன் வருகிறார்கள். அனைவருக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளம்.

ஆண்ட்ரியா தமிழ் நடிகை. ஆனால் அவருக்கு மும்பையில் இருந்து ‘மேக்கப்மேன்’ வேண்டும் என்கிறார். திரிஷா அவர் நடித்த படவிழாவுக்கு வர ரூ.15 லட்சம் கேட்கிறார்.

இப்படி இருந்தால் தயாரிப்பாளர் எப்படி பிழைப்பார்? ரஜினிகாந்த் படப்பிடிப்புக்கு வந்தால், படப்பிடிப்பு தளத்திலேயே இருக்கிறார். மம்முட்டி சொந்தமாக கேரவன் வைத்து இருக்கிறார். அதற்கான பெட்ரோல் செலவை அவரே கவனித்துக் கொள்கிறார். அவர்கள் இருவரும் தயாரிப்பாளருக்கு செலவு வைப்பதில்லை. அக்கி ரமம் செய்கிறவர்களைத்தான் கண்டிக்கிறேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்.’’

இவ்வாறு கே.ராஜன் பேசினார்.


Next Story