பகவதி பாலாவின் ‘இளம் ஜோடி’


பகவதி பாலாவின் ‘இளம் ஜோடி’
x
தினத்தந்தி 29 Oct 2021 4:34 AM GMT (Updated: 29 Oct 2021 4:34 AM GMT)

திருமதி. மஞ்சுளா கிருஷ்ணப்பா வழங்க சி. எம்.கே. புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ஓசூர் கிருஷ்ணப்பா தயாரித்துள்ள படம்தான் ” இளம் ஜோடி”

புதுமுகங்கள் விஜய்கிருஷ்ணப்பா , பிரியங்கா ஜோடியுடன் அனுகிருஷ்ணா, ஆதிஷ் பாலா, மீரா கிருஷ்ணன், பயில்வான் ரங்கநாதன், பெஞ்சமின, வைகாசி ரவி, கர்ணா ராதா, ஜூனியர் அசோகன், போண்டாமணி, அம்பானி சங்கர், புரோட்டா முருகேசு, பட்டு மாமி ஆகியோருடன் பகவதி பாலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மக்கள் தொடர்பு விஜயமுரளி, கிளாமர் சத்யா.

‘‘பணம் படைத்தவர்கள் மத்தியில் சாதியும், மதமும் கைகோர்த்து சிரிக்கிறது. பணம் இல்லாதவர்களிடம்தான் சாதியும், மதமும் அரிவாள், வேல் கம்பு மூலம் அவர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்குகிறது என்ற கருத்தை ‘இளம் ஜோடி’ படத்தில் சொல்லியிருக்கிறோம்’’ என்கிறார், டைரக்டர் பகவதி பாலா.

கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இந்தப் படம் வளர்ந்துள்ளது.


Next Story