சினிமா துளிகள்

பட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் - அஜித் திடீர் அறிக்கை + "||" + Do not call by title - Ajith Sudden Report

பட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் - அஜித் திடீர் அறிக்கை

பட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் - அஜித் திடீர் அறிக்கை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இவரை ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் தல அஜித் என்று அழைத்து வருகிறார்கள்.


இந்நிலையில் அஜித் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,

இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி,மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர் திட்டத்தை தடுக்க கர்நாடகாவிற்கு உரிமை இல்லை ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
ஒகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்த தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கர்நாடகாவிற்கு எந்த உரிமையும் இல்லை என்றும், இந்த திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க. அரசுக்கு அ.தி.மு.க. முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
2. பா.ஜ.க. ஆட்சியில் வறுமை கோட்டிற்கு கீழே சென்ற 23 கோடி மக்கள்; காங்கிரஸ் அறிக்கை
பா.ஜ.க. ஆட்சியில் 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே சென்றுள்ளனர் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
3. கொரோனா தடுப்பு பணி: மருத்துவர்களுக்கு உடனடியாக ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
4. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு: கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும்
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு: கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை.
5. காவல்துறையில் காலியிடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
காவல்துறையில் உள்ள காலி பணியிடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.