சினிமா துளிகள்

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல் + "||" + Kamal fully recovered from corona infection

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்
கமல் ஹாசன் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளபோதிலும், 3ம்தேதிவரை தனிமைப்படுத்தப்படுவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நிலையில் தொண்டை பாதிப்பு மற்றும் இருமல் காரணமாக சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற பரிசோதனை முடிவில் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


இந்நிலையில் மருத்துவமனை தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து கமல் ஹாசன் முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 3ம்தேதிவரை அவர் தனிமைப்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதியில் இருந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள கமல் தயாராகிவிடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் படத்தில் நடித்து வருவதுடன் நீண்டநாள் கிடப்பில் உள்ள இந்தியன்2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் பரிசோதனை 6 கோடியை கடந்தது; 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளது. 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கரூரில் 209 பேருக்கு கொரோனா
கரூரில் 209 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
3. வ.உ.சி. கொள்ளு பேத்திக்கு கொரோனா
வ.உ.சி. கொள்ளு பேத்தி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. மேலும் 499 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. மாவட்டத்தில் புதிதாக 684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதில் முதியவர் ஒருவர் இறந்தார்.
மாவட்டத்தில் புதிதாக 684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதில் முதியவர் ஒருவர் இறந்தார்.