சினிமா துளிகள்

மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா + "||" + Anushka to star again in famous director film

மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா

மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா, மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார்.
பல படங்களில் பிசியாக நடித்து வந்த அனுஷ்கா, தனது உடல் எடை கூடிய பின் திரைப்படங்களில் நடிக்காமல் எடையை கட்டுப்பாடாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வந்தார். தீவிரமான உடற்பயிற்சியை, தான் மட்டுமல்லாமல் தன்னுடைய திரையுலகத் தோழிகள் பலருடன் செய்து வந்தார். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் தான், அனுஷ்காவின் கடைசி வெற்றிப் படம்.


இந்த நிலையில் மீண்டும் தமிழில் புதிய படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம் அனுஷ்கா. ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திரு மகள், தாண்டவம் படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவர் அனுஷ்கா. நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் விஜய் இயக்கத்தில் கமர்ஷியல் கதையில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதி படத்தில் ஷிவானி - உறுதிப்படுத்திய புகைப்படம்?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி பிறகு படங்களில் நடிக்க துவங்கியிருக்கும் ஷிவானி தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
2. 4 வருட திருமண வாழ்வை கொண்டாடிய கோலி - அனுஷ்கா தம்பதி
விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து அனுஷ்காவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்
பிரபல நடிகைகள் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு பேர் புதிய திரில்லர் படத்தில் நடிக்கிறார்கள்.
4. ரசிகர்கள் எதிர்பார்ப்பது என் படத்தில் இல்லை - பிரபு தேவா
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பணியாற்றி வரும் பிரபு தேவா, தற்போது தேள் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
5. மகேஷ் பாபு இயக்கத்தில் நடிக்கும் அனுஷ்கா
நடிகை அனுஷ்கா நடிக்க உள்ள புதிய படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராக உள்ளது.