சினிமா துளிகள்

வலிமை படத்தின் 2வது சிங்கிள் புரமோ... ரசிகர்கள் கொண்டாட்டம் + "||" + 2nd single Puramo of Valimai movie ... Fans celebration

வலிமை படத்தின் 2வது சிங்கிள் புரமோ... ரசிகர்கள் கொண்டாட்டம்

வலிமை படத்தின் 2வது சிங்கிள் புரமோ... ரசிகர்கள் கொண்டாட்டம்
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் வலிமை படத்தின் 2வது சிங்கிள் புரமோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே அறிவித்தார்.


இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் 'நாங்க வேற மாறி' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடல் யூடியூப்பில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

இதனையடுத்து அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் வலிமை படத்தின் 2வது பாடல் புரமோ இன்று வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதன் முழு பாடல் டிசம்பர் 5ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாக இருக்கிறது. தாய் மகன் பாசத்தை உணர்த்தும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுத, சித் ஸ்ரீராம் பாடி இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் இணைந்த வலிமை கூட்டணி - தொடங்கிய படப்பிடிப்பு?
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்து படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. ‘வலிமை’ அஜித் போல் சாகசம் செய்ய நினைத்து 'பல்ப்' வாங்கிய வாலிபர்கள் - வீடியோ
வலிமை அஜித் போல் சாகசம் செய்ய நினைத்து வாலிபர்கள் செய்த செயல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
3. நடிகர் அஜித்தின் 'வலிமை' ரிலீஸ் ஒத்திவைப்பு..!
வலிமை திரைப்பட ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
4. 'அஜித் சார், இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல' - புகழ் நெகிழ்ச்சி பதிவு..!
'வலிமை' திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகர் புகழ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
5. வலிமை டிரைலர் படைத்த சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அதன் டிரைலர் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.