சினிமா துளிகள்

விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு + "||" + Mass announcement of Vikram's next film

விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு

விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு
கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து விக்ரம் நடிக்க இருக்கும் சீயான் 61வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதையடுத்து, பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.


இந்நிலையில், விக்ரமின் அடுத்த படத்தை பா.ரஞ்சித் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்சமயம் சீயான் 61 என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 13 நகர்ப்புற உள்ளாட்சிகளில் புதிய பஸ் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல்
காஞ்சீபுரம், கடலூர் உள்பட 13 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2. வெப் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு
நட்டி நட்ராஜ் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் விறுவிறு திரில்லர் படமாக உருவாகி வரும் வெப் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
3. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்; தமிழகத்தில்-146, சென்னையில்-70 தெருக்கள்
தமிழகத்தில் மொத்தம் 146 தெருக்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
4. ஓடிடியில் வெளியாகிறது 'மகான்' திரைப்படம்..!
நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் இணைந்து நடித்துள்ள 'மகான்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
5. கொரோனா பரவல்; 6 நாட்களுக்கு ரெயில்கள் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கொரோனா பரவலை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்களுக்கு 4 ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.