சினிமா துளிகள்

கால் தவறி விழுந்த கன்னட நடிகர் கவலைக்கிடம் + "||" + Kannada Famous Actor Shivaram Admitted to hospital, Condition is serious

கால் தவறி விழுந்த கன்னட நடிகர் கவலைக்கிடம்

கால் தவறி விழுந்த கன்னட நடிகர் கவலைக்கிடம்
பிரபல கன்னட நடிகர் சிவராம். இவர், பிரபல இயக்குனர்கள் சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ், புட்டண்ண கனகல் உள்பட சிலரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
1965-ல் ‘பெரத ஜீவ’ என்ற கன்னட படம் முலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் பல படங்களில் கதாநாயகனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்தார். மறைந்த நடிகர் ராஜ்குமாருடன் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

தமிழில் ரஜினிகாந்த், கவுதமி நடித்த தர்மதுரை படத்தை தயாரித்து அந்த படத்தில் நடித்தும் இருக்கிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் நடித்த இந்தி படமான கிரப்தார் படத்தையும் இவர் தயாரித்துள்ளார். சிவராம் பெங்களூருவில் திடீரென்று கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மூளையில் ரத்த கசிவும் ஏற்பட்டது. சிவராமை பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் கவலைக்கிடம்
பல படங்களில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றிய சிவசங்கர் மாஸ்டர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2. பிரபல நடிகர் கைகலா சத்யநாராயணா கவலைக்கிடம்
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்த பிரபல நடிகர் கைகலா சத்யநாராயணா கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில்