சினிமா துளிகள்

கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ் + "||" + Tamil Nadu Medical Department notice to Kamal

கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ்

கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ்
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார்.
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.


கமலுக்குப் பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பூரண நலம் பெற்ற கமல்ஹாசன் 4-ந் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டு நேராக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனையில் இருந்து கொரோனா விதிமுறைகளை மீறி நேராக படப்பிடிப்புச் சென்றது தொடர்பாக கமலுக்கு தமிழக மருத்துவத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபடும் என்று கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்?
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி அமைச்சர் துரைமுருகன் வழக்கு - ஐகோர்ட்டு நோட்டீஸ்
தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி அமைச்சர் துரைமுருகன் வழக்கு - ஐகோர்ட்டு நோட்டீஸ்.
3. பாஸ்போர்ட் முடக்கத்தை எதிர்த்து கவிஞர் லீனா மணிமேகலை வழக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
பாஸ்போர்ட் முடக்கத்தை எதிர்த்து கவிஞர் லீனா மணிமேகலை வழக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்.
4. சேகர்ரெட்டி வீட்டில் நடந்த சோதனை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
சேகர்ரெட்டி வீட்டில் நடந்த சோதனை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்.
5. எம்.எல். சட்டப்படிப்புகளை நடத்த சென்னை பல்கலைக்கழகத்துக்கு தடை கேட்டு வழக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
7 வகையான எம்.எல். படிப்புகளை நடத்த தடை கேட்டு தொடரப்பட்ட வழக்குக்கு பதில் அளிக்கும்படி சென்னை பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.