சினிமா துளிகள்

ரிலீஸ் தேதியில் பின் வாங்கிய பிரபு தேவா + "||" + Prabhu Deva bought back after the release date

ரிலீஸ் தேதியில் பின் வாங்கிய பிரபு தேவா

ரிலீஸ் தேதியில் பின் வாங்கிய பிரபு தேவா
பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், தற்போது திடீரென ரிலீஸில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரபுதேவாவை திரைகளில் பார்த்து நீண்ட காலமாகிவிட்ட வருத்தம் அவரது ரசிகர்களுக்கு உள்ளது. கடைசியாக தமிழில் நடித்த தேவி-2 படம் 2019-ல் வெளியானது. பல வருடங்களாக திரைக்கு வராமல் முடங்கி இருந்த பொன்மாணிக்கவேல் படம் தியேட்டரில் ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டுவிட்டனர்.


இந்த நிலையில் பிரபுதேவா நடித்துள்ள தேள் படம் இந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ரசிகர்களும் தியேட்டரில் தேள் படத்தை பார்க்கும் ஆவலோடு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் தேள் படம் ரிலீசை தள்ளிவைத்து விட்டனர்.

இதுகுறித்து பட நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எதிர்பாராத காரணத்தினால் ‘தேள்’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அனைவரின் ஒத்துழைப்புக்கு நன்றி. விரைவில் சந்திப்போம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இது பிரபுதேவா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பொங்கலுக்கு களம் இறங்கும் பிரபு தேவா
பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் தேள் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2. முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
4. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
5. வனம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, அனுசித்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘வனம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.