சினிமா துளிகள்

3 ஆண்டுகளுக்கு பிறகு கார் ரேசில் களமிறங்கும் ஜெய் + "||" + Jay banging car races after 3 years

3 ஆண்டுகளுக்கு பிறகு கார் ரேசில் களமிறங்கும் ஜெய்

3 ஆண்டுகளுக்கு பிறகு கார் ரேசில் களமிறங்கும் ஜெய்
பிரபல நடிகர் ஜெய் படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் அப்போது கார் ரேசில் களம் இறங்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் ஜெய். இவர் நடிப்பில் தற்போது பிரேக்கிங் நியூஸ், சிவ சிவா உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. நடிப்பதை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் ஜெய்.


கார் ரேஸில் அவ்வப்போது பங்கேற்று வரும் நடிகர் ஜெய், தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எம்.ஆர்.எப் மற்றும் ஜேஏமோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் ஃபார்முலா ஃபோர் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார். மூன்று நாட்கள் போட்டியாக இந்த பந்தயம் நடைபெறுகிறது. இப்போட்டியில் ஜெய்யுடைய கார் எண்.6.

3 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் கார் பந்தயத்தில் ஜெய் களமிறங்குகிறார். இப்போட்டியில் நடிகர் ஜெய்க்கு எண்ணித்துணிக திரைப்பட குழு ஸ்பான்சர் செய்கிறது. மேலும் இந்த வருடத்தில், அவர் திரைத்துறையில் இசையமைப்பாளாராக அறிமுகமாவது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்போது அவரது விளையாட்டு வீரர் அவதாரம், அவருக்கு மற்றொரு மகுடமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சுந்தர்.சி, ஜெய் நடிக்கும் 'பட்டாம்பூச்சி' படத்தின் டீசர் வெளியானது..!
சுந்தர்.சி மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள 'பட்டாம்பூச்சி' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
2. பிகில் நடிகையுடன் ஆட்டம் போட்ட ஜெய்
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வரும் ஜெய், பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகையுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
3. பொங்கல் தினத்தில் களமிறங்கும் சசிகுமார்
பொங்கல் தினத்தில் வெளியாக இருந்த அஜித்தின் வலிமை திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், சசிகுமார் நடித்த படம் அன்றைய தினத்தில் வெளியாக இருக்கிறது.
4. மார்க் ஆண்டனியாக களமிறங்கும் விஷால்
வீரவே வாகை சூடும் படத்திற்கு பிறகு விஷால் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
5. அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் பிரபாஸ்
70-களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் ராதே ஷ்யாம் படம் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.