நீங்க இல்லாமல் நான் இல்லை - சிம்பு


நீங்க இல்லாமல் நான் இல்லை - சிம்பு
x
தினத்தந்தி 13 Dec 2021 4:42 PM GMT (Updated: 13 Dec 2021 4:42 PM GMT)

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் சிம்பு, நீங்க இல்லாமல் நான் இல்லை என்று கூறியிருக்கிறார்.

நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிம்பு, தனது அடுத்த இன்னிங்சை தொடங்கிவிட்டார் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன்- ஏ.ஆர்.ரஹ்மான்-சிம்பு கூட்டணி 3-வது முறையாக இந்த படத்தில் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை, நடிகர் சிம்புவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது.


Next Story