விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை


விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை
x
தினத்தந்தி 27 Dec 2021 5:07 PM GMT (Updated: 2021-12-27T22:37:50+05:30)

இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி அடுத்ததாக விஜய் மில்டன் படத்தில் நடிக்கிறார்.

கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படம், முதல் முறையாக தாமன் & தியூ பகுதியில் படமாக்கப்படும் முதல் தமிழ்படம் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு மத்தியில் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கியமான பாத்திரமொன்றில் நடிக்கிறார். கன்னட திரையுலகின் மிக திறமை வாய்ந்த இரண்டு நடிகர்களான தனஞ்செயா மற்றும் ப்ருத்வி அம்பர் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்கள்.

மேலும் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் ரமணா ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படி பல பேர் இணைந்த கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story