சல்மான்கான் படத்தில் இணையும் பிரபல நடிகர்


சல்மான்கான் படத்தில் இணையும் பிரபல நடிகர்
x
தினத்தந்தி 27 Dec 2021 5:55 PM GMT (Updated: 27 Dec 2021 5:55 PM GMT)

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் நடித்து வரும் புதிய படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்து இருக்கிறார்.

சல்மான் கான் நடிப்பில் வெளியான டைகர் படத்தின் பாகம் ஒன்று மற்றும் 2 சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து டைகர் படத்தின் 3ஆம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சல்மான்கானுக்கு ஜோடியாக கத்ரினா கைப் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சல்மான் கான் படத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பது, ரசிகர்கள் மத்தியில் டைகர் 3 பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தை தவிர பதான் என்ற படத்திலும், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் ஷாருக்கான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story