வெப் தொடரில் அதிரடி காட்டும் அஞ்சலி


வெப் தொடரில் அதிரடி காட்டும் அஞ்சலி
x
தினத்தந்தி 28 Dec 2021 4:33 PM GMT (Updated: 2021-12-28T22:03:59+05:30)

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த அஞ்சலி, அடுத்ததாக புதிய வெட் தொடரில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் அடுத்ததாக ஜான்சி என்னும் வெப் தொடரில் நடித்திருக்கிறார். திரு இயக்கி இருக்கும் இந்த வெப் தொடரை டிரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் கிருஷ்ணா தயாரித்து இருக்கிறார்.

முழு நீள ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகும் இந்த வெப் தொடரில் நடிகை அஞ்சலி, அதிரடி வேடத்தில் தோன்றுவது இதுவே முதல் முறை. இத்தொடர் பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கை நுனியில் வைத்திருக்கும், திரில் பயணமாக உருவக்கி வருகிறார்கள்.

இத்தொடரில் அஞ்சலியுடன் முமைத்கான், கல்யாண் மாஸ்டர், ராஜ் அர்ஜுன், சரண்யா ஆர், சம்யுக்தா ஹோமத் உள்ளிட்ட முன்ணனி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Next Story