இப்போதும் என் அப்பா அவர் மேல் உட்கார வைத்து உலகத்தை காட்டுகிறார் - ராஜமவுலி பெருமிதம்


இப்போதும் என் அப்பா அவர் மேல் உட்கார வைத்து உலகத்தை காட்டுகிறார் - ராஜமவுலி பெருமிதம்
x
தினத்தந்தி 28 Dec 2021 6:22 PM GMT (Updated: 2021-12-28T23:52:49+05:30)

ஆர்.ஆர்.ஆர் திரைபடத்தின் இசைவெளியீட்டு விழாவில் அப்படத்தை பற்றியும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் பற்றியும் இந்திய மண்ணை பற்றியும் அப்படத்தின் இயக்குனர் ராஜமவுலி பேசினார்.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் அப்படத்தின் இயக்குனர் ராஜமவுலி பேசும் போது, தமிழ் தாய்க்கு வணக்கம். சென்னை மாநகருக்கு வணக்கம். 13 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு முன்தொகை கொடுத்ததால் பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தை அவருக்கு கொடுத்துள்ளேன். இப்படத்தின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு 50 வயது ஆகிறது. இப்போதும் என் அப்பா அவர் மேல் உட்கார வைத்து உலகத்தை காட்டுகிறார். இந்திய மண்ணில் இருக்கும் ஒரு புரட்சி, இந்திய மண்ணில் இருக்கும் ஒரு கலாச்சாரம் அதுதான் இப்படம். இந்த மாதிரி படம் பண்ண இருவர் வேண்டும். நல்ல நண்பர்களாக சகோதரர்களாக அப்படி பட்ட இருவர்தான் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் என்றார்.

Next Story