இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது - இளையராஜா உருக்கம்


இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது - இளையராஜா உருக்கம்
x
தினத்தந்தி 7 Jan 2022 4:40 PM GMT (Updated: 7 Jan 2022 4:40 PM GMT)

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் காமகோடியன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையிசைப் பாடலாசிரியர்களின் ஒருவரான கவிஞர் காமகோடியன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76. இவர் தமிழில் நானூறு படங்களில் ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். வாழ்க்கை சக்கரம், ஞானப்பறவை, மரிக்கொழுந்து, தேடி வந்த ராசா, தேவதை, சிகாமணி ரமாமணி, மௌனம் பேசியதே, திருட்டு ரயில் போன்ற படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

இவரது மறைவிற்கு இளையராஜா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கவிஞர் காமகோடியன் அவர்கள் நேற்றிரவு உடல்நலமின்றி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை எனக்கு "வரப்பிரசாதம்" திரைப்படத்தில் வேலைசெய்யும் போதே, தயாரிப்பு மேலாளராக பணியாற்றியதின் மூலம் நன்றாகவே தெரியும்.

அப்பொழுதே தனக்கு தமிழ்ப்பாடல்களை எழுதுவதில் ஆர்வம் இருப்பதாக கூறியிருந்தார். அவர் நம்முடைய M.S.V அண்ணாவுடன் மிக நெருங்கிய தொடர்பிலும் இருந்தார். மேடை கச்சேரிகளில் கவிஞர் காமகோடியான் எழுதிய "மனிதனாயிரு" என்ற தனிப்பாடலை M.S.V  அண்ணாவும் பாடியது இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

என்னுடைய இசையமைப்பிலும் பல பாடல்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். அன்னார் மறைவு நம் தமிழ்திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரைப் பிரிந்து வாடும் கவிஞரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கவிஞரின்

 ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்’ இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story