இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று


இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 31 Jan 2022 5:52 PM GMT (Updated: 2022-01-31T23:22:04+05:30)

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் இளையராஜா தொலைப்பேசி மூலம் பாரதிராஜாவிடம் நலம் விசாரித்திருக்கிறார். பாரதிராஜா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தொலைப்பேசி வாயிலாக பேசி அவரை உற்சாகப் படுத்தியிருக்கிறார் இளையராஜா. இன்று பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாரதிராஜாவுக்கு கொரோனா உருதியானதை இயக்குனர் சீனு ராமசாமி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Next Story