வைரலாகும் வரலட்சுமி சரத்குமார் படத்தின் போஸ்டர்


வைரலாகும் வரலட்சுமி சரத்குமார் படத்தின் போஸ்டர்
x
தினத்தந்தி 4 April 2022 6:16 PM GMT (Updated: 4 April 2022 6:16 PM GMT)

சபரி என்ற படத்தில் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார் படத்தின் போஸ்டர் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், தற்போது சபரி என்ற புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். அனில்காட்ஸ் இயக்கும் இப்படத்தை மஹா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் திரு.மகேந்திர நாத் கோண்ட்லா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் வரலட்சுமி சரத்குமார் கலந்துக் கொண்டுள்ளார்.

காதல் மற்றும் கிரைம் கலந்த  திரைப்படமாக சபரி படம் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், சஷாங்க் சித்தம்ஷெட்டி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கோபி சுந்தரின் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக நானி சமிடிசெட்டியும், கலை இயக்குனராக ஆசிஷ் தேஜா புலாலாவும், படத்தொகுப்பாளராக தர்மேந்திரா காக்கர்லால் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு உகாதி தினத்தன்று துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதன் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story