பீஸ்ட் - கேஜிஎஃப் படங்களை ஓப்பிடுவதே தவறு - நடிகர் ஆரி காட்டம்


பீஸ்ட் - கேஜிஎஃப் படங்களை ஓப்பிடுவதே தவறு - நடிகர் ஆரி காட்டம்
x

சமீபத்தில் நடந்த ‘3.6.9’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கேஜிஎஃப் - பீஸ்ட் படங்களை ஒப்பிடாதீர்கள் என்று நடிகர் ஆரி காட்டமாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட பாக்யராஜ், 21 வருடங்களுக்கு பிறகு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘3.6.9’. இப்படத்தை பிஜிஎஸ் சரவணகுமார் தயார்ப்பில் இயக்குனர் சிவ மாதவ் இயக்கியுள்ளார். உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது இப்படம். 24 கேமராக்களில் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்க, 75க்கும் மேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

இதில் படக்குழுவினருடன் பலரும் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் ஆரி பேசியதாவது, இந்த படத்திற்கு வருவதற்கு முன் படத்தை பற்றிய விசயங்களை கேட்டேன். சயின்ஸ் பிக்சன் படம் என்றார்கள். '3.6.9' எனது கார் நம்பர். அந்த நம்பர் பற்றி பலர் சொன்ன பிறகுதான் தெரிந்தது. உலகில் எந்த விசயத்தை எடுத்து கொண்டாலும் அது  '3.6.9' நம்பரில் அடங்கிவிடும். அப்படியான பவர் அந்த நம்பருக்கு உண்டு. அந்த கருத்தில் தான் இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள் என நினைக்கிறேன். இங்கு பேசிய படக்குழுவினர் அனைவரும் அவர்களின் தாய் தந்தையரை வாழ்த்தி பேசியது பிடித்திருந்தது. இப்போது சினிமாவில் ஒரு பஞ்சாயத்து போய் கொண்டு இருக்கிறது. பீஸ்ட் - கேஜிஎஃப். முதலில் இதை ஓப்பிடுவதே தவறு. கேஜிஎஃப் ஒரு பான் இந்திய படம், ஆனால் பீஸ்ட் ஒரு மொழிக்கான படம்,  அதற்காக பீஸ்டை தாழ்த்தி பேசுவது மிகவும் தவறு. தமிழ் சினிமா செய்யாத சாதனைகளே இல்லை. இங்கு தான் ஒத்த செருப்பு போன்ற படம் வந்தது. உலகின் 100 சிறந்த படங்களில் பட்டியலிடப்பட்ட நாயகன் படமும் இங்கு தான் உருவானது.

தமிழ் படங்களை தாழ்த்தி பேசக்கூடாது. இதோ இந்தப்படமும் 81 நிமிடத்தில் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இப்படிப்பட்ட படங்களை நாம் கொண்டாட வேண்டும். முன்னெடுத்து செல்ல வேண்டும். இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். பாக்யராஜ் சார் 21 வருடங்கள் கழித்து நாயகன் என்கிறார்கள். ஆனால் அவர் எப்போதும் ஹீரோ தான். அவரளவு சாதனைகள் எவரும் செய்ய முடியாது. சின்ன வீடு எனும் அடல்ட் படத்தை கூட குடும்பத்தோடு பார்க்கும் படி எடுப்பவர். ஒரு அடல்ட் படம் எப்படி எடுக்க வேண்டும் என அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் மாதிரி அடல்ட் படம் எடுத்தால், நான் நடிக்க தயார். இப்போது கூட அவர் நடிக்கும் படங்களில் சாதனை செய்கிறார். இப்படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று கூறினார்.

Next Story