விஷால் பட நடிகர் மீது மோசடி புகார்


விஷால் பட நடிகர் மீது மோசடி புகார்
x
தினத்தந்தி 26 April 2022 6:06 PM GMT (Updated: 2022-04-26T23:36:30+05:30)

வீரமே வாகை சூடும் பட வில்லன் நடிகர் பாபுராஜ் மீது மோசடி புகார் கூறப்பட்டதை அடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல மலையாள நடிகர் பாபுராஜ். இவர் தமிழில் ஸ்கெட்ச், ஜனா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஷால் நடித்து சமீபத்தில் வெளியான, வீரமே வாகை சூடும் படத்தில் வில்லனாக வந்தார். இந்நிலையில், தற்போது பாபுராஜ் மீது கேரள மாநிலம் கொத்தமங்கலம் தாலக்கோடு பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் அருண் குமார், கோர்ட்டில் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “பாபுராஜிடம் இருந்து மூணாறு பகுதியில் உள்ள ரிசார்ட்டை 2020-ல் அட்வான்ஸ் ரூ.40 லட்சம் என்றும், மாதம் வாடகை ரூ.3 லட்சம் என்றும் ஒப்பந்தம் போட்டு குத்தகை எடுத்தேன். பிறகு கொரோனா பொது முடக்கத்தால் ரிசார்ட் மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் ரிசார்ட்டை திறக்க சென்றபோது, வருவாய் துறை 2018-ம் ஆண்டிலேயே நோட்டீஸ் அனுப்பி அந்த இடத்தை கையகப்படுத்தி இருப்பது தெரியவந்தது. அதை மறைத்து தனக்கு வாடகைக்கு விட்டு மோசடி செய்துள்ளார். அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டும் தரவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து, கோர்ட்டு உத்தரவின்பேரில் நடிகர் பாபுராஜ் மீது அடிமாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story