விஷால் உடை அலங்காரத்தில் கவனம் செலுத்தாதது ஏன்?


விஷால் உடை அலங்காரத்தில் கவனம் செலுத்தாதது ஏன்?
x
தினத்தந்தி 8 May 2022 9:25 AM GMT (Updated: 8 May 2022 9:25 AM GMT)

‘மார்க் ஆண்டனி' பட விழாவில் நடிகர் விஷால் அணிந்து வந்த உடை குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.

‘வீரமே வாகை சூடும்' படத்துக்குப்பிறகு விஷால் ‘மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

‘மார்க் ஆண்டனி' பட விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் விஷால் அணிந்து வந்த உடை குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிடுகிறார்கள். ‘பட விழாவுக்கு அணிந்து வர வேறு நல்ல ஆடையே கிடைக்கவில்லையா?' போன்ற பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்கு விஷால் என்ன பதில் சொல்ல போகிறார்? என்று தெரியவில்லை.


Next Story