சினிமா துளிகள்

‘தளபதி 66’ படத்தில் குவியும் நட்சத்திரங்கள் + "||" + Accumulating stars in the film ‘Commander 66’

‘தளபதி 66’ படத்தில் குவியும் நட்சத்திரங்கள்

‘தளபதி 66’ படத்தில் குவியும் நட்சத்திரங்கள்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘தளபதி 66’ படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. தமன் இசையமைக்கும் இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு  ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சமீபத்தில் ஐதராபாத் சென்ற விஜய் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் நடிகர் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை ஜெயசுதா ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ‘தளபதி 66’ படத்தில் நடிக்கவிருக்கும் பிற நடிகர்கள் குறித்த விவரங்களை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நடிகர் ஷாம், யோகி பாபு, நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா ஆகியோர் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதில் யோகி பாபு விஜய்யுடன் மெர்சல், சர்கார், பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி
சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கின்றனர்.
2. விஜய் சேதுபதி படத்தில் ஷிவானி - உறுதிப்படுத்திய புகைப்படம்?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி பிறகு படங்களில் நடிக்க துவங்கியிருக்கும் ஷிவானி தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
3. திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்
பிரபல நடிகைகள் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு பேர் புதிய திரில்லர் படத்தில் நடிக்கிறார்கள்.
4. மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா, மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார்.
5. ரசிகர்கள் எதிர்பார்ப்பது என் படத்தில் இல்லை - பிரபு தேவா
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பணியாற்றி வரும் பிரபு தேவா, தற்போது தேள் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.