பிரபல நடிகையின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மணிரத்னம்


பிரபல நடிகையின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மணிரத்னம்
x
தினத்தந்தி 11 May 2022 5:40 PM GMT (Updated: 2022-05-11T23:10:53+05:30)

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் பிரபல நடிகையின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் 'சென்டிமீட்டர்'. இதில் 'அசுரன்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன் நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொண்டிருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் மற்றும் ஷிவாஸ் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 'சென்டிமீட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story