எல்லோருக்கும் கொடூரமான சாவு காத்திட்டு இருக்கு.. 'பாயும் ஒளி நீ எனக்கு' பட டிரைலர் வைரல்
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. இப்படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.
அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இவர்களுடன் தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சாகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் 'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரில் அதிகபடியான வெளிச்சம் இருந்தா தான் அரவிந்துக்கு கண்ணு தெரியும். உன்ன சமந்தப்பட்ட எல்லோருக்கும் கொடூரமான சாவு காத்திட்டு இருக்கு போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த டிரைலர் பலரையும் கவர்ந்து யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.
பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படம் வருகிற ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.