லியோ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் படக்குழு


லியோ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் படக்குழு
x

நடிகர் விஜய் தற்போது 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 'லியோ' திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் இவர் நான்கு நாட்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டென்சில் ஸ்மித் பாலிவுட் படங்கள் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான 'டெனட்' திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story