நடிகை பாவனாவுக்கு கிடைத்த சிறப்பு கவுரவம்


நடிகை பாவனாவுக்கு கிடைத்த சிறப்பு கவுரவம்
x

ஐக்கிய அமீரகம் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசா 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடியது.

ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார், கமல்ஹாசன் ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர்.

இந்நிலையில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையும் தமிழில் தீபாவளி, ஆர்யா, வெயில், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்த பாவனாவுக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைலாகி வருகிறது.


Next Story