அநீதி படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிவகுமார்
இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவான திரைப்படம் “அநீதி”. இப்படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வெயில், அங்காடி தெரு, காவிய தலைவன் போன்ற படங்களை இயக்கி திரைத்துறையில் நீங்கா இடம்பிடித்த இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவான திரைப்படம் "அநீதி". இந்த படத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார்.
அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவான "அநீதி" திரைப்படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் பார்த்த பிரபலங்கள் பலர் படக்குழுவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், "அநீதி" திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவகுமார் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.