'லியோ' படத்தில் கேமியோ ரோலில் தோன்றும் அனிருத்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தி ல்விஜய் நடித்து வரும் படம் 'லியோ'. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 'லியோ' படத்தில் இசையமைப்பாளர் அனிருத் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியில் அனிருத் தோன்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story