இணையத்தை கலக்கும் ஆர்யா பட பாடல் முன்னோட்டம்


இணையத்தை கலக்கும் ஆர்யா பட பாடல் முன்னோட்டம்
x

முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இப்படத்தின் முதல் பாடலான டவுளத்தான ரவுடி பாடலின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இதில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் முதலான டவுளத்தான ரவுடி பாடலின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story