'பொன்னியின் செல்வன்' படம் பார்க்க வந்த திரைப்பிரபலங்கள்.. செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’. இப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் காலை 9 மணிக்கு வெளியானது. இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் காட்சியை இப்படத்தில் நடித்த நட்சத்திரங்களான கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம், ஜெயராம் ஆகியோர் வெவ்வேறு திரையரங்குகளில் பார்த்து வருகின்றனர்
அதன்படி, நடிகர்கள் ஜெயம் ரவி, வெற்றி திரையரங்கிலும் கார்த்தி, காசி திரையரங்கிலும் ஜெயராம் வடபழநி திரையரங்கிலும் ரசிகர்களுடன் 'பொன்னியின் செல்வன்-2' திரைப்படத்தை பார்த்துள்ளனர். அப்போது ரசிகர்கள் இவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.