ஏமாத்துறது தப்பு இல்ல.. ஏமாறதுதான் தப்பு.. வைரலாகும் சதீஷ் பட டீசர்


ஏமாத்துறது தப்பு இல்ல.. ஏமாறதுதான் தப்பு.. வைரலாகும் சதீஷ் பட டீசர்
x

நடிகர் சதீஷ் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘வித்தைக்காரன்’. இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கி இயக்கியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதிஷ் நடித்துள்ள திரைப்படம் 'வித்தைக்காரன்'. இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டீசரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.


Next Story