முதல் பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்


முதல் பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்
x
தினத்தந்தி 28 May 2023 10:04 PM IST (Updated: 28 May 2023 10:06 PM IST)
t-max-icont-min-icon

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'. இப்படத்தின் முதல் பாடலான 'வா செந்தாழினி' நாளை வெளியாகவுள்ளது.

ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் 'அடியே' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'வா செந்தாழினி' படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'வா செந்தாழினி' பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


Next Story