பாரதிராஜா படத்தின் அப்டேட் கொடுத்த தனுஷ்
மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கப்படவுள்ளது.
பாராதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. இப்படத்தில் இளையராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்க உள்ளது. மேலும் படப்பிடிப்பை தேனி மற்றும் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், 'மார்க்கழி திங்கள்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். பாரதிராஜா வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.