சந்திரமுகி -2 படத்தின் அடுத்த பாடல் எப்போது தெரியுமா? படக்குழு அறிவிப்பு


சந்திரமுகி -2 படத்தின் அடுத்த பாடல் எப்போது தெரியுமா? படக்குழு அறிவிப்பு
x

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, 'சந்திரமுகி -2' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தோரி போரி' பாடலின் லிரிக் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.


Next Story