கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்


கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்
x

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்' . இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருவம் இந்த படத்தில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் படக்குழு பெரிய அளவில் காட்சியை பதிவு செய்து வருகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 'கேப்டன் மில்லர்' படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கேப்டன் மில்லர் படத்திற்காக மூன்று, நான்கு பின்னணி இசை கம்போஸ் செய்திருக்கிறேன். இவற்றுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. சிறப்பான பின்னணி இசை வந்து கொண்டிருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். இந்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Next Story