'hi நான்னா'.. வைரலாகும் நானி பட கிளிம்ப்ஸ் வீடியோ


hi நான்னா.. வைரலாகும் நானி பட கிளிம்ப்ஸ் வீடியோ
x

இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம், நான் ஈ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இதையடுத்து நானியின் 30-வது படத்தை இயக்குனர் சவுரவ் இயக்குகிறார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'ஹாய் நான்னா' என படக்குழு டைட்டில் வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story