அமெரிக்காவை விட இந்தியாவில் முன்னதாக வெளியாகும் 'இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி'


அமெரிக்காவை விட இந்தியாவில் முன்னதாக வெளியாகும் இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி
x

இயக்குனர் ஜேம்ஸ் மான்கோல்ட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’.

இயக்குனர் ஜேம்ஸ் மான்கோல்ட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி'. இப்படத்தை கேத்லீன் கென்னடி, ஃபிராங்க் மார்ஷல் மற்றும் சைமன் இமானுவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஜார்ஜ் லூகாஸ் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

கதாநாயகன் ஹாரிசன் ஃபோர்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக நடித்துள்ள இந்த படத்தில் ஃபோப் வாலர்-பிரிட்ஜ், அன்டோனியோ பண்டேராஸ், ஜான் ரைஸ்-டேவிஸ், டோபி ஜோன்ஸ், பாய்ட் ஹோல்ப்ரூக் மற்றும் மேட்ஸ் மிக்கெல்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி சாகச திரைப்படமான 'இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி' திரைப்படம் அமெரிக்காவை விட ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் வெளியிடப்படுகிறது.

அதாவது, இப்படம் ஜூன் 29 -ஆம் தேதி திரையரங்குகளில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story