சலார் படக்குழுவினருக்கு இப்படியொரு பரிசா..? அசத்திய பிரபாஸ்
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் பிரபாஸ் படக்குழுவினருக்கு தலா ரூ. 10,000 அன்பளிப்பாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story