படப்பிடிப்பில் விறுவிறுப்பு காட்டும் ஜிகர்தண்டா 2 படக்குழு


படப்பிடிப்பில் விறுவிறுப்பு காட்டும் ஜிகர்தண்டா 2 படக்குழு
x

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜிகர்தண்டா 2 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இப்படத்திதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி பலரயும் கவர்ந்தது.

இந்நிலையில் ஜிகர்தண்டா படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் சண்டை காட்சி ஒன்று கொடைக்கானலில் திலீப் சுப்பராயன் தலைமையில் 80 சண்டை கலைஞர்களுடன் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சண்டைக்காட்சியில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் பங்குபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story