பிரபல கன்னட நடிகர் படுகாயம்


பிரபல கன்னட நடிகர் படுகாயம்
x

பிரபல கன்னட நடிகர் திகந்த் குடும்பத்தினருடன் கோவா கடற்கரையில் விளையாடியபோது எதிர்பாராமல் தவறி விழுந்ததில் கழுத்தில் பலத்த அடிபட்டு படுகாயம் ஏற்பட்டது.

பிரபல கன்னட நடிகர் திகந்த். இவர் மிஸ் கலிபோர்னியா, ஹவுஸ்புல், மனசாரே, சவுகா, காளிபாட்டு, பார்ச்சூனர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 4 படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தற்போது தெலுங்கில் வெற்றி பெற்ற எவரு படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார்.

திகந்த் குடும்பத்தினருடன் சேர்ந்து கோவா சென்றார். அங்குள்ள கடற்கரையில் விளையாடியபோது எதிர்பாராமல் தவறி விழுந்தார். அவரது கழுத்தில் பலத்த அடிபட்டு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் பெங்களூரு அழைத்து வரப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். திகந்த்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். திகந்த் கீழே விழுந்து படுகாயம் அடைந்த படங்கள் மற்றும் ஆம்புலன்சில் ஏற்றும் புகைப்படங்கள் வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story