லியோ படத்தின் "நா ரெடி" பாடல் யூடியூபில் 7.5 கோடி பார்வையாளர்களை கடந்தது


லியோ படத்தின் நா ரெடி பாடல் யூடியூபில் 7.5 கோடி பார்வையாளர்களை கடந்தது
x

'நா ரெடி' தற்போது வரை 7.5 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 'லியோ' படத்தில் இருந்து "அல்டர் ஈகோ நா ரெடி" பாடலை 'லியோ' படக்குழு நேற்று வெளியிட்டது. இந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். மேலும் சில நடன காட்சிகளும் இந்த பாடல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், 'நா ரெடி' தற்போது வரை 7.5 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.


Next Story