நயன்தாரா திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு


நயன்தாரா திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள திரைப்படம் ‘கோல்டு’. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கும் படம் 'கோல்டு'. பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் புத்திரன் செய்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

அதன்படி, 'கோல்டு' திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story