உலகத்துல எந்த திசையில் தப்பு நடந்தாலும் அதை தட்டிக்கேட்க.. வைரலாகும் ஆர்யா பட டீசர்
முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இதில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டீசரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Related Tags :
Next Story