தொடர்ந்து இணையத்தை ஆக்கிரமிக்கும் "காவாலா" பாடல்
‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த பாடல் தற்போது யூடியூபில் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' பாடல் ரசிகர்களை கவர்ந்து யூடியூபில் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர்.
'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.