வித்யாசமான தோற்றத்தில் ரசிகர்களை கவரும் ராதாரவி


வித்யாசமான தோற்றத்தில் ரசிகர்களை கவரும் ராதாரவி
x

தமிழ் திரையுலகின் பன்முகத்தன்மை கொண்ட நடிகராக வலம் வருபவர் ராதாரவி. ராதாரவி புதிய வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது.

கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான மன்மத லீலை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராதாரவி. கதாநாயகன், வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், டப்பிங் ஆர்டிஸ் என பன்முகத்தன்மை கொண்ட ராதாரவி தற்போது வரை தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 500 படங்களுக்கு மேல் ராதாரவி பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராதாரவி புதிய வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது. கோட் சூட் அணிந்து வில்லன் போன்று காட்சியளிக்கும் ராதாரவியின் புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.


Next Story