தம்பியுடன் இணையும் ராகவா லாரன்ஸ்.. பவர்புல்லாக தயாராகும் புதிய படைப்பு


தம்பியுடன் இணையும் ராகவா லாரன்ஸ்.. பவர்புல்லாக தயாராகும் புதிய படைப்பு
x

இயக்குனர் இன்னாசி பாண்டியன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்த பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் 'டைரி' பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகுகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

விறுவிறுப்பான ஆக்ஷன், த்ரில்லர் ஆக உருவாக உள்ள இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான வைஷாலி ராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே பி ஒய் வினோத், விஜே தணிகை, சென்றாயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்திற்கு 'டிமான்டி காலனி', 'டைரி' உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாளுகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் சென்னை, தென்காசி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இப்படம் குறித்து இயக்குனர் இன்னாசி பாண்டியன், "இது ஒரு முழு நீள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம். இந்த கதையை தான் நான் எனது முதல் திரைப்படமாக இயக்க இருந்தேன், ஆனால் ஒரு சில காரணங்களால் அது இயலவில்லை. எனவே இதை எனது இரண்டாவது படமாக தற்போது இயக்குகிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களுக்கு நன்றி" என்று கூறினார்.


Next Story